இலங்கை
விசாரணை வளையத்துக்குள் யூடியூபர்!
விசாரணை வளையத்துக்குள் யூடியூபர்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் முன்னரே தகவல் வெளியிட்ட யூடியூபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி அளித்த முறைப்பாட்டுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வாக்குமூலம் வழங்கச் செல்லும்போது கைது செய்யப்படுவார் என யூடியூபர் ஒருவர் காணொலி வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பலத்த விமர்சனங்கள் எழுந்திருந்தன. இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையத் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவிய போது, இது தொடர்பான விசாரணையை புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.