இலங்கை
ஹரீன் வழக்கு ஒத்திவைப்பு!
ஹரீன் வழக்கு ஒத்திவைப்பு!
தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கு விசாரணைக்காக ஹரீன் பெர்னாண்டோ நேற்று பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இதன்போது, பதுளை நீதிவான் நுஜித் டி. சில்வா வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.