இலங்கை

16 வயது சிறுவனின் தற்கொலை உதவிய ChatGPT ; குற்றச்சாட்டிய பெற்றோர்

Published

on

16 வயது சிறுவனின் தற்கொலை உதவிய ChatGPT ; குற்றச்சாட்டிய பெற்றோர்

அமெரிக்காவில் 16 வயது மகனின் தற்கொலைக்கு சாட்ஜிபிடி (ChatGPT) உதவியதாக, ஓபன்ஏஐ (OpenAI)மீது, பெற்றோர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

Advertisement

ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற இந்த தற்கொலைக்குப் பின், சிறுவனின் சாட்ஜிபிடி உரையாடல்களை பெற்றோர் ஆய்வு செய்தனர்.

அதில், தற்கொலை செய்யும் வழிமுறைகளை சிறுவன் சாட்ஜிபிடி மூலம் கேட்டதும், அதற்கு பதில்கள் கிடைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் “தங்கள் மகனின் தற்கொலைக்கு காரணமாக செயல்பட்டது சாட்ஜிபிடி” எனக் குற்றம் சாட்டி, ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Advertisement

இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சம்பவத்தையடுத்து, சாட்ஜிபிடியின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பல தரப்பில் கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கிடையில், ஓபன்ஏஐ நிறுவனம் இது தொடர்பாக புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

Advertisement

அதில்,

“மக்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் அவர்களுக்கு நம்பகமான உதவிகளை வழங்கும் வகையில், சாட்ஜிபிடி மென்பொருளை மேலும் பொறுப்புடன் செயல்படும் முறையில் வடிவமைக்கி வருகிறோம்,” என நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாட்ஜிபிடி, மக்களை ஆதரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாய் இருந்தாலும், நீண்ட உரையாடல்களில் அதன் பாதுகாப்பு செயல்பாடுகள் சில சமயங்களில் முற்றிலும் செயல்படாமல் போவதாகவும், இது போன்ற அபாயகரமான பதில்கள் உருவாகக் கூடும் என்பதை நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version