சினிமா

அம்மா அழ காரணம்..அப்பா ஏன் வரவில்லை!! ரவி மோகனை விமர்சித்த தயாரிப்பாளர்..

Published

on

அம்மா அழ காரணம்..அப்பா ஏன் வரவில்லை!! ரவி மோகனை விமர்சித்த தயாரிப்பாளர்..

நடிகராக திகழ்ந்து தற்போது இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் புதிய பாதையை ஆரம்பித்திருக்கிறார் நடிகர் ரவி மோகன். சில தினங்களுக்கு முன் ரவி மோகன் ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தை பிரம்மாண்ட முறையில் தொடங்கினார் ரவி மோகன். இதுகுறித்து பலர் பாராட்டி வரும் நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு விமர்சித்துள்ளார். அதில், வளர்ந்து கொடிக்கட்டி பறந்த தயாரிப்பாளர்களே வெளியேறிவிட்ட நிலையில், ஜெயம் ரவிக்கு என்ன தெரியும்.ரவி மோகன் அன்பான, கனவான மனிதர். 22 வருட சினிமா வாழ்க்கையில் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஆனால் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலிக்கத் தொடங்கியபோது, அவரது பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் சுஜாதாவின் குடும்பப் பின்னணி தான். எடிட்டர் மோகன் சினிமாத்துறையில் ஜெண்டில்மேனாக அறியப்பட்டாலும், சுஜாதா குடும்பம் ஜெயம் ரவியை கட்டுப்படுத்த நினைத்தது.திருமனத்திற்கு பின் ஜெயம் ரவி மாமியார் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தார். அவருடைய சினிமா வாழ்க்கையை சுஜாதா விஜயகுமாரே தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டது. ஜெயம் ரவி நடிக்க வேண்டிய படம், இயக்குநர், கதை என அனைத்தையும் சுஜாதா தான் முடிவு செய்தார். அவர் தேர்ந்தெடுத்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தது. மாமியார், மனைவி கட்டுப்பாட்டில் ஜெயம் ரவி 10 முதல் 12 ஆண்டுகள் இருந்தார்.ஒரு கட்டத்தில், அந்த திருமண பந்தத்தை உடைத்துவிட்டு வெளியே வந்தார். அதன்பின் கெனிஷா நட்பு கிடைத்து, ரவியின் கஷ்டத்தை போக்கினார். உலகளவில் நண்பர்கள் இருக்கும் கெனிஷாவுடன் ரவி மோகன் தொடங்கியிருக்கும் புதிய தயாரிப்பு நிறுவனத்திற்கு உதவக்கூடும். ரவி மோகன் அம்மா மேடையில் கண்ணீர்விட்டது ஆனந்தக்கண்ணீரா அல்லது வேதனையா? என்று தெரியவில்லை, அப்பா எடிட்டர் மோகன் ஏன் வரவில்லை. குடும்பத்தில் ரவி மோகன் – கெனிஷா உறவு தொடர்பாக விருப்பமில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version