இலங்கை

அஸ்கிரிய பீடத்தின் புதிய அணு நாயக்கர்

Published

on

அஸ்கிரிய பீடத்தின் புதிய அணு நாயக்கர்

  அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டதை அடுத்து, புதிய தெரிவுக்கான தேர்தல் இன்று கண்டியில் உள்ள அஸ்கிரிய மகா விகாரையில் இடம்பெற்றது.

இந்நிலையில் அஸ்கிரிய பீடத்தின் புதிய அனுநாயக்கராக, அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Advertisement

அஸ்கிரிய பீடத்தின் தலைமை பீடாதிபதி வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரின் தலைமையில் இந்தத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் அஸ்கிரிய கரக மகா சங்க சபையின் மொத்தம் 19 உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

கடந்த ஜூன் 20 ஆம் திகதி தனது 67 வயதில் காலமான ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் மறைவைத் தொடர்ந்து இந்தப் பதவி வெற்றிடமான நிலையில் புதியவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version