சினிமா

இதற்கு தனுஷ் தான் காரணம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடைத்த ரகசியம்

Published

on

இதற்கு தனுஷ் தான் காரணம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடைத்த ரகசியம்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே விவாகரத்தை அறிவித்துவிட்டனர்.ஐஸ்வர்யா, சூப்பர் ஸ்டார் மகள் என்ற அடையாளத்தை தாண்டி தனுஷின் 3 படத்தின் மூலம் தன்னை இயக்குநராக அடையாளப்படுத்திக்கொண்டார்.கடைசியாக இவரது இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த, சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க லால் சலாம் என்ற படம் தயாரானது. பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியான இப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை.இந்நிலையில், பேட்டி ஒன்றில் அனிருத் மற்றும் தனுஷ் குறித்து ஐஸ்வர்யா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” அனிருத்துக்கு திறமை உண்டு, அவரை வெச்சு பண்ணலாம்னு சொன்னது தனுஷ் தான். அவர் சினிமா துறைக்கு வருவதற்கு முழுக்க முழுக்க காரணம் தனுஷ்.அவங்க அப்பா அம்மா அநிருத்தை அமெரிக்காவில் படிக்க வைக்க முடிவெடுத்த நிலையில், இல்லை அவனுக்கு திறமை இருக்கு, என்ன நம்புங்க என்று சொல்லி, கீபோர்டு வாங்கி குடுத்து 3 படத்தில் பண்ண வெச்சது தனுஷ்தான்” என்று கூறியுள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version