இலங்கை
இருதய சத்திரசிகிச்சை ரணிலுக்கு அவசியம்;
இருதய சத்திரசிகிச்சை ரணிலுக்கு அவசியம்;
தேசிய மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப்பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.
அவரது இதயத்தில் சில சிக்கல்கள் உள்ளன. விரைவில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்துவது நல்லது. தேசிய மருத்துவமனையில் காத்திருப்புப் பட்டியல் சில நேரங்களில் சுமார் 3 ஆண்டுகளாகும். பிணை வழங்கப்பட்டதால் சத்திரசிகிச்சைக்காக அவர் விரும்பும் மருத்துவமனைக்குச் செல்லலாம் -என்றார்.