இலங்கை

இலங்கையில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் கவலை

Published

on

இலங்கையில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் கவலை

இலங்கையில் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் குழுவை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது .

ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) கவலை வெளியிட்டுள்ளார்.

Advertisement

2024 டிசம்பரில், 116 ரோஹிங்கியாக்கள் கொண்ட குழு கடல் வழியாக இலங்கைக்கு வந்து, பின்னர் முல்லைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் அவர்களை மீட்டு மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக அரசாங்கத்தையும் இலங்கை கடற்படையையும் பாராட்டிய அவர்,

அரசாங்கத்துடனான நீண்டகால ஒப்பந்தத்தின்படி அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையகத்தை அணுகவும், பதிவு செய்ய அதிகாரிகளை வலியுறுத்தினார்.

Advertisement

மேலும் மியான்மருக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ரோஹிங்கியா மக்கள் ஏற்கனவே உள்ள மோசமான சூழ்நிலைகள் மேலும் மோசமடைவதை எதிர்கொள்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version