சினிமா
எல்லைமீறிப்போகும் சிங்கிள் பசங்க ஷோ!! எஸ்கேப் ஆன இயக்குநர் பார்த்திபன்..
எல்லைமீறிப்போகும் சிங்கிள் பசங்க ஷோ!! எஸ்கேப் ஆன இயக்குநர் பார்த்திபன்..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் சமீபத்தில் ஆரம்பித்த சிங்கிள் பசங்க என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருவதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள்.இரட்டை வசனப்பேச்சு, நெருக்கமான காட்சிகள் உட்பல இந்நிகழ்ச்சியில் இடம்பெற்று வருவதால், நடுவராக இருந்த இயக்குநர் பார்த்திபன் விலகியுள்ளார்.அவருக்கு பதிலாக இயக்குநரும் நடிகருமான டி ராஜேந்தர் நிகழ்ச்சிக்கு நடுவராக இணைந்துள்ளார். மேலும், நடிகை கனிகாவும் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார்.இதை பார்த்த நெட்டிசன்கள் இப்படியும் ஒரு நிகழ்ச்சி தேவையா என்று விமர்சித்து வருகிறார்கள்.