பொழுதுபோக்கு
எஸ்.பி.பி. பாடகர் வாழ்க்கை தொடக்கம், முடிவு இரண்டுமே இந்த பாடகி தான்; கடைசி கச்சேரியில் நடந்த சுவாரஸ்யம்!
எஸ்.பி.பி. பாடகர் வாழ்க்கை தொடக்கம், முடிவு இரண்டுமே இந்த பாடகி தான்; கடைசி கச்சேரியில் நடந்த சுவாரஸ்யம்!
கொரோனா காலக்கட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடைசியாக நடத்திய இசை கச்சேரியும், அந்த கச்சேரி முடிந்து தனது வீட்டுக்கு வந்தது குறித்தும் பாடகி எஸ்.ஜானகி பேசிய த்ரோபேக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில், பல ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி பாடகராக வலம் வந்தவர் தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். 1966-ம் ஆண்டு ஹோட்டல் ரம்பா என்ற படத்தில் பாடல் பாடியிருந்தார். இதுதான் எஸ்.பி.பி தமிழில் பாடகராக அறிமுகமான முதல் படம். ஆனால் இந்த படம் வெளியாகவில்லை. அதன்பிறகு எம்.ஜி.ஆர் நடிப்பில் 1969-ம் ஆண்டு வெளியான அடிமைப்பெண் படத்தில் ‘ஆயிரம் நிலவே’ பாடல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார்,அதன்பிறகு, எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன், எம்.எஸ.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். இவர் பாடிய பல பாடல்கள் இன்றும் அவரது நினைவை போற்றும் வகையில் அமைந்துள்ளது. அதன் தனி சிறப்பு என்று சொல்லலாம்.பாடல் மட்டும் அல்லாமல் தன்னுடள் பல திறமைகளை வைத்திருந்தவர் எஸ்.பி.பி.கமல்ஹாசனுக்கு ஒருசில படங்களில் டப்பிங் குரல் கொடுத்துள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பிரபு தேவாவின் காதலன், நாகர்ஜூனாவின் ரட்சகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பு பயணம், 70-களிலேயே தொடங்கிவிட்டது. ஒரு சில, தமிழ், மற்றும் தெலங்கு படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்த எஸ்.பி.பி, ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். அதேபோல், ரஜினி படத்திற்கே இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சி.வி.ஸ்ரீதர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த துடிக்கும் கரங்கள் படத்திற்கு எஸ்.பி.பி தான் இசை.இப்படி பல திறமைகளை தன்வைசம் வைத்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாடகி எஸ்.ஜானகியுடன் நெருங்கிய நட்பில் இருந்தார். இருவரும் இணைந்து பல ஹிட் பாடல்களை பாடியுள்ளனர். எஸ்.பி.பி இசையமைத்த துடிக்கும் கரங்கள் படத்தில் கூட எஸ்.ஜானகி அவருடன் இணைந்து 3 பாடல்களை பாடியிருந்தார். இவர்களுக்கு இடையே நெருக்கிய நட்பு இருந்த நிலையில், எஸ்.பி.பி இறந்தவுடன், எஸ்.ஜனகி உருக்கமாக ஒரு வீடியோவில் பேசினார். சுப்பிரமணியம் (எஸ்.பி.பி) நான் அவரை அப்படித்தான் கூப்பிடுவேன்.முதன் முதலில் நெல்லூரில் ஒரு இசை நிகழ்ச்சியில் அவரை சந்திதேன். அப்போது அவருக்கு பரிசு கொடுத்து, அவரது பாட்டை கேட்டேன். மிகவும் அருமையாக பாடியிருந்தார். அதை கேட்டுவிட்டு, சினிமாவில் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று சொன்னேன். அதன்பிறகு அவர் சென்னை வந்து பாடல் பாட தொடங்கினார். நாங்கள் இருவரும் இணைந்து பல பாடல்கள் பாடி இருக்கிறோம். அவர் செல்லும் இடமெல்லாம், ஜானகி அம்மா ஆசீவாதம் தான் நான் இப்படி இருக்கேன் என்று சொல்வார். அதேபோல் அவர் கடைசியாக நடத்திய இசை கச்சேரி மைசூரில் நடைபெற்றது. அதில் நானும் பங்கேற்றிருந்தேன்.கச்சேரி முடிந்தவுடன், என் வீட்டுக்கு வந்து என் பசங்களுடன் ஜாலியாக பேசிவிட்டு, எங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, பொழுதை கழித்துவிட்டு சென்றார். அதுதான் அவரின் கடைசி கச்சேரி. அதன்பிறகு ஐதராபாத் சென்றுவிட்டு, உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். 50 நாட்களளுக்கு மேலாக ஹாஸ்பிடலில் இருந்தும், மீண்டு வந்துவிடுவார் என்று நினைத்தோம். ஆனால் வரவில்லை. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது, எவ்வளர் கஷ்டப்பட்டானோ, கடவுள் அவனை அழைத்துக்கொண்டார் என்று உருக்கமாக கூறியுள்ளார்.