இலங்கை
கம்மன்பிலவுக்கு எதிராக விரைவில் விசாரணை!
கம்மன்பிலவுக்கு எதிராக விரைவில் விசாரணை!
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் உதய கம்மன்பில ஊடக சந்திப்பொன்றில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
கடந்த 5ஆம் திகதி நடத்தப்பட்ட ஊடக சந்திப்பொன்றில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் உதய கம்மன்பில சமூகங்களுக்கு இடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் வெளியிட்டமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
கடந்த 8ஆம் திகதி கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலிலங்காபுரவிடம் தெரிவித்துள்ளது.