சினிமா

கல்யாணம்றது ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு மாதிரி ..! RM தயாரிப்பில் ரிலீஸான ‘Bro Code’ பட ப்ரோமோ

Published

on

கல்யாணம்றது ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு மாதிரி ..! RM தயாரிப்பில் ரிலீஸான ‘Bro Code’ பட ப்ரோமோ

தமிழ்த் திரையுலகில்  பிரபல நடிகராக திகழ்ந்து வந்த ரவி மோகன், தற்போது ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.  இதன் திறப்பு விழா  நேற்று முன்தினம் பிரம்மாண்டமாக நடை பெற்றதோடு அதில் ரவிமோகனின்  குடும்பம்  முதல்  பாலிவுட், கோலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர். குறித்த விழாவில் ரவி மோகன் மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசியிருந்தார். அதுபோலவே அவருடைய நெருங்கிய தோழி கெனிஷாவும்  மனம் திறந்து பேசி இருந்தார் . மேலும் தன்னுடைய கையில் 7 ஸ்ட்ரிப் ரெடியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில்  உருவாகியுள்ள ‘ப்ரோ கோட்’ படத்தின் ப்ரோமோ  நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை  இயக்குநர் கார்த்திக் ஜோகி எழுதி இயக்கியுள்ளார். ப்ரோ கோட் படத்தில்  ரவி மோகனுடன் எஸ்.ஜே சூர்யா, அர்ஜுன் அசோகன், உபேந்திரா, கௌரி பிரியா, ஐஸ்வர்யா ராஜ் என பலரும் இணைந்துள்ளனர்.  இந்த ப்ரோமோவை பார்க்கும் போது  திருமணத்திற்கு பிறகு ஆண்களின் வாழ்க்கை எப்படி ஆகிவிட்டது என்றும்,பெண்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆண்கள் வாழ்கின்றார்கள்  போலும், பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா எவ்வளவு ஜாலியா இருக்கும் என்ற கணவரின் மனநிலையை பிரதிபலிப்பது போலும் உள்ளது . எனினும் இது ஆர்த்திக்கு கொடுக்கின்ற பதிலடியா? என்று நெட்டிசன்கள் கமெண்ட் பண்ணியும் வருகின்றார்கள். குறித்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள இளையராஜாவின் பாடல்  படத்தின் கதையை யூகிக்க வைக்கும்  படியாக அமைந்துள்ளது.  தற்போது   ரவி மோகனின் இந்த படம் வெற்றி பெற பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version