இலங்கை
காணி விடுவிப்புக்காக அமைச்சு மட்டக்குழு; அரசாங்கம் ஆலோசனை!
காணி விடுவிப்புக்காக அமைச்சு மட்டக்குழு; அரசாங்கம் ஆலோசனை!
காணி விடுவிப்புத் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சுக்கள் மட்டத்தில் குழுவொன்றை உருவாக்குவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை, அம்பாறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட் டங்களிலும் விவசாய நடவடிக்கைக்கான காணிகளை வழங்குவதற்கும், சில பகுதிகளில் குடியமர்வுக்கான காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்களம், மகாவலி அதிகாரபை உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் கலந்துரையாடி, நிரந்தரக் குடியிருப்பு அமைத்தல், வர்த்தகம் மற்றும் விவசாயம் போன்ற நடவடிக்கைகளுக்கு காணிகளை வழங்கும் நோக்கில் இந்த அமைச்சுக்களுக்கு இடையிலான குழுவொன்றை நியமிப்பது தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது- என்றார்.