இலங்கை
காற்றின் வேகம் அதிகரிப்பு
காற்றின் வேகம் அதிகரிப்பு
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.