பொழுதுபோக்கு
குறை சொல்றதா நினைக்காத? உங்க அப்பாக்கு குஷியான உணர்ச்சி வரல: பிரபல பாடகரின் மகனிடம் சொன்ன இளையராஜா!
குறை சொல்றதா நினைக்காத? உங்க அப்பாக்கு குஷியான உணர்ச்சி வரல: பிரபல பாடகரின் மகனிடம் சொன்ன இளையராஜா!
பாடகர் எஸ்.பி.பிக்கு தொண்டை சரியல்லாததால் ட்ராக் பாட வந்தவர் தான் இவர். “16வயதினிலே” படத்தில் துவங்கியது இவரது இசைப்பயணம். முதல் பாடலே பட்டி தொட்டி எங்கும் பிரபலாமானது. அதன் பின்னர் ஹீரோக்களுக்கு ஓப்பனிங் சாங் பாடும் அளவிற்கு முன்னேறினார் அவர்.ரஜினிக்கு “முரட்டுக்காளை”படத்தில் இவர் பாடிக்கொடுத்த ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாடலுக்கு இன்றும் மவுசு இருந்து தான் வருகிறது. அதே போல ரஜினியின் “அருணாச்சலம்” படத்தில் வாசுதேவன் பாடிய ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ பாடலில் அவர் கொடுத்த வைப் மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.மலேசியா வாசுதேவன் சினிமாவிற்கு வர முக்கிய காரணமாக அமைந்தவர் இளையராஜா. இளையராஜா வாசுதேவனை வைத்து பாடலை ஒத்திகை பார்க்க, அது பாரதிராஜாவுக்கு பிடித்து போக அப்படி துவங்கியது தான் மலேசியா வாசுதேவனின் திரை வாழ்க்கை.ஒரு நாள் இளையராஜாவின் இசையில் பாடலை பாடிக்கொண்டிருந்த போது வாசுதேவனை பார்த்து ரஜினி, கமலுக்கு உனது குரல் பொருந்திவிட்டது, அதே போல சிவாஜிக்காக பாடப்போகிறாய் என சொன்னாராம் இளையராஜா.அவர் சொல்லி முடித்த மறு நிமிடமே கைகளை கூப்பி இளையராஜாவை நோக்கி கும்பிட்டாராம் வாசுதேவன். எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்து திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமலேயே இருந்த மலேசியாவுக்கு இளையராஜா “16வயதினிலே”யில் கொடுத்த வாய்ப்பு தான் சிவாஜிக்கு பாடல் பாடும் அளவில் உயர்த்திவிட்டது.தான் பட்ட கஷ்டமெல்லாம் போதும் இந்த நிலைக்கு உயர வைத்த உங்களுக்கு தான் முதலில் நன்றி சொல்லவே என கண்ணீர் மல்க தனது நன்றியை சொன்னாராம் இளையராஜாவிற்கு. இந்நிலையில் இளையராஜா ஒரு மேடையில் யுகேந்திரன், அதாவது மலேசியா வாசுதேவனின் மகனிடம் பேசியபோது கூறுகையில், “ஆசை நூறு வகை பாடலை நான் கம்போஸ் செய்த போது நீ அப்போது மிகவும் சிறிய குழந்தை. உன் அப்பாவுக்கு குஷியான பாடலை பாடவே வராது. இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால், ஒரு இசையமைப்பாளருக்கு எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை உணர்த்த தன. தவறாக நினைக்காதீர்கள்.” என்று கூறினார்.