இலங்கை

கொழும்பு மருத்துவமனையின் பிரதிப்பணிப்பாளருக்கு ஆப்பு

Published

on

கொழும்பு மருத்துவமனையின் பிரதிப்பணிப்பாளருக்கு ஆப்பு

கொழும்பு, தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷான் பெல்லனவுக்கு எதிராகக் ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு
எதிர்பார்க்கப்படுகின்றது என்று பதில் சுகாதார அமைச்சர் மருத்துவர் ஹங் சக விஜேமுனி நேற்றுத் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டமைக்காகவே அவர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஓர் அரச அதிகாரியாகவும், மருத்துவ நெறிமுறைகளின் படியும் அவர் அவ்வாறு செய்ய முடியாது. ஒரு நோயாளியின் உடல்நிலை தொடர்பாக ஏனைய தரப்பினருக்கு தகவல்களை வெளியிடக்கூடாது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் அனைவரும் நோயாளிகளே. நோயாளி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டதன் மூலம் பதில் பணிப்பாளர் தனக்குப் பொருத்தமற்ற ஒன்றைச் செய்துள்ளார் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version