இலங்கை

சீதை அம்மன் ஆலயத்தில் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் வழிபாடு

Published

on

சீதை அம்மன் ஆலயத்தில் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் வழிபாடு

   இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்திற்கு வருகை தந்த இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகரை, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆலய அறங்காவலர் குழுவின் தலைவருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழுவின் செயலாளர் சிவாகுணசேகரன் ஆகியோர் வரவேற்றனர் .

Advertisement

வழிபாட்டை தொடர்ந்து, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சீதை அம்மன் ஆலய வரலாறு,தொன்மைதொடர்பிலும் கேட்டறிந்தார்.

ஆலயத்திற்கு வருகை தரும்இராஜதந்திரிகளின் குறிப்பேட்டில் உயர்ஸ்தானிகர் ஒரு சிறப்பு குறிப்பை எழுதினார்.

மேலும் உயர்ஸ்தானிகருக்கு நினைவுப் பரிசு ஆலய அறங்காவலர் குழுவின் நினைவுப்பரிசு ஒன்றினையும் வழங்கி கௌரவித்தனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version