இலங்கை

செம்மணி மனித புதைகுழி இடத்திற்கு செல்லவுள்ள ஜனாதிபதி அனுர

Published

on

செம்மணி மனித புதைகுழி இடத்திற்கு செல்லவுள்ள ஜனாதிபதி அனுர

  ஜனாதிபதி அனுரகுமார , செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக சாத்தியங்கள் உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார எதிர்வரும் முதலாம் திகதி வருகை தரவுள்ளார்.

Advertisement

இந்நிலையில் யாழில். புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, ஊடகவியலாளர் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு முதலாம் திகதி ஜனாதிபதி வருகை தரவுள்ளார்.

மக்களின் காணிகள் மக்களிடமே கையளிக்கப்படும் என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும். அது ஜனாதிபதி வருகை தரும் நாள் அன்றோ , அதற்கு முதலோ பின்னரோ நடைபெறலாம்.

Advertisement

அதனை எப்ப என தற்போது உறுதியாக கூற முடியாது. ஆனாலும் காணிகள் விடுவிக்கப்படும் என்பது நிச்சயம்.

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிடுவாரா என்பதனையும் தற்போது நிச்சயமாக கூற முடியாது.

சில வேளைகளில் அவற்றை பார்வையிட சந்தர்ப்பம் உண்டு எனவும்   கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version