இலங்கை

செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடத்தி வைக்கப்பட்ட 108 திருமணம்!

Published

on

செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடத்தி வைக்கப்பட்ட 108 திருமணம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதியில் வறுமையில் உள்ள திருமணமாகாத 108 ஜோடிகளுக்கு சிங்கப்பூர் தம்பதியினர் இன்றைய தினம் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

 யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் உள்ள 108 ஜோடிகளுக்கே இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

 சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின், நிதியுதவியில் 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

 தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளும் அத்ததுடன் பணம் வழங்கப்பட்டுள்ளது.

 குறித்த தம்பதியினர் யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

 இந்நிலையில் இன்றைய திருமண நிகழ்வில் கலந்து கொண்டு 108 தம்பதியினரையும் வாழ்த்தி, இன்று மதியம் ஆலயத்தில் மதிய போசன விருந்து உபசாரமும் இடம்பெற்றுள்ளது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version