பொழுதுபோக்கு
நீ படிக்கலனாலும் பரவால்ல, பாட்டு படி; அப்பா சொன்ன அறிவுரை, ஆனா எனக்கு சங்கீதமே தெரியாது: கே.ஜே.யேசுதாஸ்
நீ படிக்கலனாலும் பரவால்ல, பாட்டு படி; அப்பா சொன்ன அறிவுரை, ஆனா எனக்கு சங்கீதமே தெரியாது: கே.ஜே.யேசுதாஸ்
இந்திய சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடி இன்றுவரை மக்கள் மனதில் நிலைத்திருக்கக்கூடிய பாடகர் கே.ஜே.யேசுதாஸ், நீ படிக்கவே வேண்டாம், பாடலை பாடி என்று தனது அப்பா சொன்னதாக ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் எஸ்.பாலச்சந்தர் தொடங்கி இன்றைய ராக்ஸ்டார் அனிருத் வரை பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியவர் தான் கே.ஜே.யேசுதாஸ். இவர் பாடிய பல பாடல்கள் இன்றும் நிலைத்திருக்கிறது. அதேபோல் டி.எம்.எஸ். தொடங்கி எஸ்.பி.பி வரை, எஸ்.ஜானகி தொடங்கி சைந்தவி வரை பல பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.1960-களில் தனது பாடகர் பயணத்தை தொடங்கிய கே.ஜே.யேசுதாஸ், கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு வெளியான தமிழரசன் என்ற படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். கத்தி படத்தின் க்ளைமேக்ஸில் வரும் யாரோ யாரோ நீ யாரோ என்ற பாடலை விஜய்க்காக கே.ஜே.யேசுதாஸ் பாடியிருந்தார். பாட்டு மட்டும் இல்லாமல் இசையமைப்பாரளாகவும் சில படங்களில் பணியாற்றியுள்ள இவர், ஒரு சில படங்களில் பாடகராகவே நடித்தும் உள்ளார். இசை அமைத்திருந்தாலும் தனக்கு சங்கீதம் தெரியாது என்று யேசுதாஸ் கூறியுள்ளார்.எம்.எஸ்.வியுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசுகையில், எனது இசைப் பயணம் ஒரு சிறிய அறிமுகத்துடன் தொடங்கியது. பிலிலா அக்காவுடன் சேர்ந்து, போக்ரோட்டில் ஶ்ரீதர் சாரின் இயக்கத்தில் ஒரு படத்துக்குப் பாட வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கான பாடல் அல்ல; வேறு ஒரு பாடகருக்காக நான் அந்த அலுவலகத்துக்கு அறிமுகம் ஆகி இருந்தேன். அப்போதுதான் முதல் முறையாக அந்தப் பெரிய இசைக் மேதையை சந்தித்தேன்.உண்மையிலேயே என்னால் பேசவோ, பாடவோ முடியவில்லை. என்ன பாட வேண்டும் என்று கேட்டபோது, ஏதோ ஒரு பாடலைப் பாடினேன். அது மட்டுமே எனக்கு ஞாபகம் இருக்கிறது. சமீபத்தில் வயலின் கலைஞர் சாம் ஜோசப்பனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர், “உங்களையும் என்னையும் அண்ணாவுக்கு அறிமுகப்படுத்தியதும், அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றதும் ஒரே நாளில் நடந்தது” என்று நினைவு கூர்ந்தார். வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் அது. ஒரு சிறிய பையனாக இருந்தாலும், இசை கற்றுக்கொள்ளும்போது, அவர் எங்களுக்கு குரு. நீ படிக்கலனாலும் பரவாயில்லை பாட்டை படி என்று என் அப்பா சொன்னதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.”பள்ளியைப் பற்றியோ, மதிப்பெண்களைப் பற்றியோ கவலைப்படாதே” என்று என் அப்பா சொன்னார். குறிப்பாக, ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த அவரே ஒரு பெரிய நடிகராக இருந்தபோதும், தன் மகன் ஒரு சிறந்த பாடகனாக வர வேண்டும் என்று விரும்பினார். எனக்கு இசையைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அண்ணா சொல்வார், “தம்பி, எனக்கு ஒரு ரேடியோவைக்கூட ட்யூன் செய்யத் தெரியாது” என்று. அதேபோல, எனக்கும் வேறு எதுவும் தெரியாது. சங்கீதமும் தெரியாது என்று கூறியுள்ளார்.