இலங்கை

பிரதமர் ஹரிணி ரணிலை சந்தித்தாரா? CIDக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Published

on

பிரதமர் ஹரிணி ரணிலை சந்தித்தாரா? CIDக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றதாக சமூக ஊடகங்களில் பரவும் பதிவுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிசிரிவி கமராக்களை சோதனை செய்வதற்கு மாளிகாகந்த நீதவான், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றதாக சமூக ஊடகங்களில் பரவும் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், மாளிகாகந்த நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிசிரிவி கமராக்களை சோதனை செய்ய அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version