இலங்கை
பெண்ணின் வாக்குமூலத்தால் சிக்கிய பல மில்லியன் பெறுமதியான பெரும் ஆபத்தான பொருட்கள்
பெண்ணின் வாக்குமூலத்தால் சிக்கிய பல மில்லியன் பெறுமதியான பெரும் ஆபத்தான பொருட்கள்
சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வரைக் கொழும்பு குற்றவியல் பிரிவு கைதுசெய்துள்ளது.
குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 4 கிலோ 302 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, மாளிகாவத்தை பகுதியில் 206 கிராம் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அங்கொட பகுதியில் அமைந்துள்ள அவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது நான்கு பொதிகளில் இருந்து 3 கிலோ 784 கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.