இலங்கை
மருமகனின் குற்றத்திற்காக மாமனாரை பலியெடுத்த கும்பல் ; வெளியான தகவல்
மருமகனின் குற்றத்திற்காக மாமனாரை பலியெடுத்த கும்பல் ; வெளியான தகவல்
பாணந்துறை, வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று (27) இரவு நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் அவரது வீட்டிலிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுபோகஹவத்த பகுதியைச் சேர்ந்த 55 வயதான உயிரிழந்தவர், பாணந்துறை நிலங்க எனப்படும் குற்றவியல் குழுவொன்றின் உறுப்பினரின் மாமனார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கி தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பாணந்துறை சாலிந்து எனும் குற்றவியல் குழுவின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.