இலங்கை

மாகாணசபைத் தேர்தலுக்கு விரைந்து சட்டமியற்றுங்கள்!

Published

on

மாகாணசபைத் தேர்தலுக்கு விரைந்து சட்டமியற்றுங்கள்!

தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு உறுதியான மற்றும் நிர்ச்சயிக்கப்பட்ட சட்டமேதும் தற்போது கிடையாது. சட்டமியற்றும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடையாது. எனவே மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் நாடாளுமன்றத்தின் ஊடாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அரசஅதிகாரிகள் ஊடாகமாகாண சபைகள் நிர்வகிக்கப்படுகின்றன. இது ஜனநாயகத்துக்குப் பொருத்தமானதாக அமையாது. தேர்தலை நடத்துவதாயின் அதற்குரிய சட்டம் அவசியம். ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் இல்லாமல் தேர்தலை நடத்தும் இயலுமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடையாது. சட்டமியற்றும் அதிகாரம் ஆணைக்குழுவுக்குக் கிடையாது. ஆகவே எமது விருப்பத்திலான சட்டத்துக்கு அமைய தேர்தலை நடத்த முடியாது. சட்டவாக்கத் துறையால் இயற்றப்படும் சட்டத்துக்கு அமைவாகவே தேர்தலை நடத்த முடியும். மாகாணசபைத் தேர்தலை நடத்துவற்கு உறுதியான மற்றும் நிச்சயிக்கப்பட்ட சட்டமேதும் தற்போது கிடையாது. தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசு எடுக்கும் சகல செயற்பாடுகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் – என்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version