இலங்கை

மூன்றரை கோடி பணமோசடியில் சிக்கிய நபர்

Published

on

மூன்றரை கோடி பணமோசடியில் சிக்கிய நபர்

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மூன்றரை கோடி ரூபாய் பண மோசடி செய்த சந்தேக நபர், ஹட்டனில் கைதாகியுள்ளார்.

டுபாய் நாட்டில் உணவகம் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோருக்கான வேலை வேலைவாய்ப்பு காணப்படுவதாக கூறி ஒரு நபரிடம் இருந்து 12 இலட்சம் தொடக்கம் 15 இலட்சம் வரையிலான தொகையினை பெற்றுள்ளார்.

Advertisement

அதன்படி மூன்றரை கோடி ரூபாய் பணத்தை சந்தேக நபர் பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ள ஹட்டன் பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்தில் மொத்தம் 49 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் 12 பேர் டுபாய் நாட்டுக்கு அனுப்புவதாக கூறி கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்த சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட 49 பேர்  ஹட்டன் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி பிரசாத் வீரசேகர அவர்களை சந்தித்தனர் .

சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version