இலங்கை
ரணில் விடயத்தில் அழுத்தம் இல்லை; வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு
ரணில் விடயத்தில் அழுத்தம் இல்லை; வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவகாரத்தில் எவ்வித இராஜதந்திர அழுத்தங்களும் அரசாங்கத்துக்கு பிரயோகிக்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. அதில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ இது பற்றி அவ்வாறு எதையும் (அழுத்தம்) அறிவிக்கவில்லை. தனிநபர்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அந்த இருவர் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இருவரில் ஒருவர் இதேபோன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளவர். தூதுவரோ, தூதரகமோ, உயர்ஸ்தானிகரோ இவ்வாறு எவ்வித அறிவிப்பையும் விடுக்கவில்லை. சட்டம் அனைவருக்கும் சமமாகச் செயற்படுகின்றது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது- என்றார்.