சினிமா
விஜய் உருவத்தில் தோன்றிய விநாயகர் சிலை; வெடித்த சர்ச்சை..!
விஜய் உருவத்தில் தோன்றிய விநாயகர் சிலை; வெடித்த சர்ச்சை..!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் வித்தியாசமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் அதில் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதாவது நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் முகத்துடன் கூடிய சிலையொன்றே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் தற்போது அது சர்ச்சையினையும் உருவாக்கியுள்ளது.அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கையெழுத்து இடுவது போன்ற விநாயகர் சிலையை அமைத்துள்ளனர். விநாயகர் நாற்காலி இளம் இருந்து கையெழுத்திடுவது போன்று அவரது சட்டை பையில் விஜய் படமும் வைக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த விநாயகர் சிலைக்கு விஜய் ரசிகர்கள் கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இதனிடையே குறித்த விநாயகர் சிலைக்கு பொலிஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், முதல்வர் என்ற பெயர் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன் குறித்த புகைப்படங்களையும் முகநூல்களில் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.