பொழுதுபோக்கு
20 நாளில் ஷூட்டிங் ஓவர்: ரஜினி பட இயக்குனருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பணம்: பெருமைக்கு விழுந்த பதிலடி!
20 நாளில் ஷூட்டிங் ஓவர்: ரஜினி பட இயக்குனருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பணம்: பெருமைக்கு விழுந்த பதிலடி!
மக்களுக்கும், தனக்கு நெருக்கமானவர்களுக்கும் அள்ளி, அள்ளி கொடுக்கும் எம்.ஜி.ஆர், படப்பிடிப்பு முடிந்து, அனைவருக்கும் பணம் கொடுப்பார். கொடுக்கும்போது ஒரே வார்த்தையை அனைவரிடமும் சொல்வார் என்று இயக்குனர் பி.வாசு கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று பெயரேடுத்தவர் சி.வி.ஸ்ரீதர். ரவிச்சந்திரன் உள்ளிட்ட புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்து வைத்த இவர், கடந்த 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில், மீனவ நண்பன் என்ற படத்தை இயக்கியிருந்தார். எம்.ஜி.ஆர், லதா, வென்னிற ஆடை நிர்மலா, வி.ஜே.ராமசாமி, நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்து. படத்திற்கு வாலி, முத்துலிங்கம், புலமைபித்தன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர் நடிக்கும்போது பாடலுக்கு ஏற்வாறு, உதடு அசையவில்லை என்று மீண்டும் ரீடேக் எடுத்துள்ளனர். இந்த காட்சியில் எம்.ஜி.ஆர் நடிக்கும்போது சந்திரமுகி படத்தை இயக்கிய இயக்குனர் பி.வாசு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். உதடு சிங்க் ஆகாததை பார்த்த பி.வாசு, இயக்குனர் ஸ்ரீதரிடம் சைகை மூலமாக கூறியுள்ளார்.இதனை புரிந்துகொண்ட ஸ்ரீதர் எம்.ஜி.ஆரிடம் ரீடேக் கேட்க, எதற்காக என்று எம்.ஜி.ஆர் விசாரித்துள்ளார். அப்போது கேமரா பிரச்னை என்று சொல்லி சமாளிக்க அந்த காட்சியை மீண்டும் எம்.ஜி.ஆர் நடித்துள்ளார். அதன்பிறகு ஸ்ரீதரும், பி.வாசுவும் கண்களால் பேசிக்கொள்ள, எம்.ஜி.ஆர் பி.வாசுவை அழைத்து இப்போது உதடு சிங்க் ஆனதா என்று கேட்க பி.வாசு ஷாக் ஆகியுள்ளார். அதன்பிறகு இது என் படம் எதுவாக இருந்தாலும், என்னிடமே சொல்லலாம் என்று கூறியுள்ளார்.அதன்பிறகு, 20 நாட்களில் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து, ஊருக்கு கிளம்பும்போது பிவாசு, சந்தான பாரதி, உள்ளிட்ட 4 உதவி இயக்குனர்கள் எம்.ஜி.ஆரை சந்தித்து போய்ட்டு வருகிறோம் என்று சொல்ல, எம்.ஜி.ஆர் 4 பேருக்கும் ஒரு சிறிய கவர் கொடுத்துள்ளார். இதை யாருக்கும் சொல்ல கூடாது. உங்களுக்கு மட்டும் தான் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். வெளியில் வந்து பிரித்து பார்த்தால் அதில் ரூ250 இருந்துள்ளது. அந்த காலக்கட்டத்தில் இது பெரிய பணம். எம்.ஜி.ஆர் நமக்கு மட்டும் தான் கொடுத்துள்ளார். நாம் யார் பையன் என்று தெரிந்துதான் பணம் கொடுக்கிறாா என்று பி.வாசு நினைத்துக்கொண்டு வந்துள்ளார்.அப்போது ரயில்ல வந்த மற்ற படக்குழுவினரும் எம்.ஜி.ஆர் தங்களுக்கும் பணம் கொடுக்கததாக கூறியுள்ளனர். அவர்களும் உங்களுக்கு மட்டும் தான் வேறு யாருக்கும் இல்லை என்று எம்.ஜி.ஆர் சொன்னதாக கூறியுள்ளனர். எம்.ஜி.ஆர் அனைவரிடமும் ஒரே மாதிரிதான் பேசியுள்ளார் என்பது அப்போது புரிந்துகொண்டதாகவும், எம்.ஜி.ஆர் கொடுத்தால் எல்லோருக்கும் தான் கொடுப்பார் என்பதையும் தெரிந்துகொண்டதாக பி.வாசு கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் பர்னல் மேக்கப் மேனாக இருந்த பீதாம்பரம் என்பவரின் மகன் தான் பி.வாசு என்பது குறிப்பிடத்தக்கது.