இலங்கை

இனியபாரதி வழங்கிய வாக்குமூலம்: முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தம்

Published

on

இனியபாரதி வழங்கிய வாக்குமூலம்: முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தம்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

 தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் கருணா-பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தர் இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (29) மதியம் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டன. 

Advertisement

 அக்கரைப்பற்று மேலதிக நீதிவான் தெசீபா ரஜீவன் முன்னிலையில், மூன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட இடங்கள் தோண்டப்பட்டன.

2005ஆம் ஆண்டு காலப்பகுதியில், காரைதீவைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர், தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவரான அருளானந்தன் சீலனை கடத்தி படுகொலை செய்து இப்பகுதியில் புதைத்ததாக அரச சாட்சியாக மாறி வாக்குமூலம் அளித்திருந்தார். 

 வியாழக்கிழமை (28) மாலை தொடங்கிய முதல் நாள் அகழ்வுப் பணிகளில் எவ்வித சான்றுகளும் கிடைக்காததால், நீதவான் உத்தரவின் பேரில் இன்று (29) இரண்டாவது நாள் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

Advertisement

 அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, பயங்கரவாத புலனாய்வு பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு, பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் தடயவியல் பொலிஸார் முன்னிலையில் பணிகள் நடைபெற்றன.

இருப்பினும், இரண்டாவது நாளிலும் எவ்வித சான்றுகளும் கிடைக்கவில்லை. 

இதனால், அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு, நீதிவானின் உத்தரவின்படி நிறைவு செய்யப்பட்டன.

Advertisement

மூன்றாவது நாள் பணிகள் நாளை தொடருமா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

முன்னதாக, ஜூலை 31ஆம் திகதி, திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானத்தில், இனிய பாரதியின் மற்றொரு சகாவான அனோசியஸ் சுரேஸ்கண்ணா (யூட்) என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட அகழ்வுப் பணிகளிலும் எவ்வித சான்றுகளும் கிடைக்கவில்லை.

அதனையடுத்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி ஏ.சி. றிஸ்வான் மேற்பார்வையில் இப்பணிகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version