இலங்கை
இளைஞர் குத்திக்கொலை; மூவருக்கு மரணதண்டனை!
இளைஞர் குத்திக்கொலை; மூவருக்கு மரணதண்டனை!
30 வயது இளைஞர் ஒருவரைக் கத்தியால் குத்திக்கொன்ற குற்றத்துக்காக, மூன்று பேருக்குத் தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க நேற்று மரணதண்டனை விதித்துள்ளார்.
14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, கத்தியால் ஒருவரைக் கொன்ற குற்றத்தில் கைது செய்யப்பட்ட மூவருக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.