இலங்கை
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு அச்சுறுத்தல்!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு அச்சுறுத்தல்!
ஐ.நா. அதிருப்தி
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதை இலக்காகக்கொண்டு இயங்கிவரும் உறவுகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்று ஐக்கிய நாடுகள் சபை தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் துறைசார் குழு விடுத்துள்ள அறிக்கையில் உள்ளதாவது:-
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறிய வேண்டியது மிகமுக்கியமான விடயமாகும். ஆனால், அத்தகைய செயற்பாட்டில் ஈடுபடுவோரும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இலங்கையில் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அந்த முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளோம் – என்றுள்ளது.