இலங்கை

செம்மணிப் புதைகுழியில் 8 என்புத்தொகுதிகள் நேற்று அடையாளம்!

Published

on

செம்மணிப் புதைகுழியில் 8 என்புத்தொகுதிகள் நேற்று அடையாளம்!

அரியாலை செம்மணிப் புதைகுழியில் இருந்து, நேற்று மேலும் எட்டு என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரியாலை செம்மணிப் புதைகுழி மீதான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36ஆவது நாள் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே, மேலும் 8 என்புத்தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதிகளில் 6 என்புத்தொகுதிகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணிப் புதைகுழியில் இருந்து இதுவரை 177 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 164 என்புத்தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version