இலங்கை

செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவு – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Published

on

செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவு – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகள் தொடர்பில் எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மனிதர்களின் நீண்ட ஆயுளுக்கு இவை தீங்கு விளைவிக்கக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

குறித்த விடயம் பிரித்தானியாவின் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சக்கரை, இனிப்புகள், நிறப்பொருட்கள் மற்றும் சுவை சேர்க்கைகள் அதிகமாக உட்கொள்ளப்படும் போது மரண அபாயம் அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதில் உள்ள குறிப்பிட்ட சேர்க்கைகள் உடல் நலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு உயிர் ஆபத்தையும் ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

இந்த உணவுகள் அதிக கொழுப்பு, சக்கரை, உப்பு கொண்டவை இருப்பினும் அவை நார்ச்சத்து, புரதம், வைட்டமின் குறைவு கொண்டதால் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் இவற்றை அதிகமாக உட்கொள்கின்ற நிலையில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மொத்த கலோரிகளின் பாதியை UPFs மூலம் அவர்கள் பெற்றுகொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் பருமன், எடை அதிகரிப்பு மற்றும் பல ஆரோக்கிய பிரச்சினைகள் உருவாக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

பிரிட்டிஷ் சூப்பர் மார்க்கெட்டில், சுவை சேர்க்கைகள் மொத்த உணவு உட்கொள்ளலின் 13.6% இடத்தைப் பெறுகின்ற நிலையில், ஆரோக்கியம் காக்க இயற்கை உணவுகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version