இலங்கை
ஜனாதிபதி அநுரவின் பாதுகாப்பு தொடர்பில் விசேட தீர்மானம்
ஜனாதிபதி அநுரவின் பாதுகாப்பு தொடர்பில் விசேட தீர்மானம்
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பு தொடர்பில் விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, அவரது பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவு ஒன்று இணைந்து கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்காக அந்த பிரிவிற்கு விசேட பயிற்சி ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் ஜனாதிபதி பாதுகாப்பிற்கு மேலதிகமாக இந்த சிறப்புப் படைப் பிரிவு ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.