இலங்கை

தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள ரணில் குறித்து வெளியான புதிய செய்தி!

Published

on

தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள ரணில் குறித்து வெளியான புதிய செய்தி!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சாதாரண அறைக்கு மாற்றப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவாரா இல்லையா என்பதை ரணில் அல்லது அவரது குடும்பத்தினர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

ரணில் விக்ரமசிங்க, மேலதிக சிகிச்சைக்காக கடந்த 23 ஆம் திகதி சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இதற்கிடையில், ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ரணில் விக்ரமசிங்கவின் இதயத்தில் உள்ள நான்கு முக்கிய தமனிகளில் மூன்று அடைப்பு ஏற்பட்டுள்ளதாக  நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சிறிது காலமாக நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது இதய திசு இறப்பு மற்றும் நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி இருந்தனர்.

Advertisement

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்‌ஷன் பெல்லன கடந்த திகதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version