இலங்கை
நாட்டு மக்களுக்காகவே எதிர்க்கட்சிகள் கூட்டணி; சஜித் பிரேமதாஸ கூறுகின்றார்!
நாட்டு மக்களுக்காகவே எதிர்க்கட்சிகள் கூட்டணி; சஜித் பிரேமதாஸ கூறுகின்றார்!
மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கவே எதிர்க்கட்சிகள் பரந்துபட்ட கூட்டணி அமைத்துள்ளன. அதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
தற்போதைய அரசாங்கத்துக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கான இயலுமை இல்லை. 40 ஆயிரம் பட்டதாரிகள் வீதியில் இருக்கின்றனர். வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய அவர்களுக்கு தொழில் வழங்கப்படவில்லை.
விவசாயிகள் உரமானியம் இன்றி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். நெல்விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நிலையான விலைக்கு வழங்க முடியவில்லை. நாட்டில் 50 சதவீதமானோர் வறுமையில் உள்ளனர் என்று தரவுகள் கூறுகின்றன. 71 சதவீதமானோர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவைக் கோருகின்றனர். பல்வேறு துறைகளிலும் பெருமளவான பிரச்சினைகள் உள்ளன. இவற்றில் ஒரு பிரச்சினைக்குக்கூட அரசாங்கத்தால் தீர்வு வழங்க முடியவில்லை. பொருள்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துச்செல்கின்றன. இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே நாம் ஒற்றுமையை ஏற்படுத்துகின்றோம் -என்றார்.