இலங்கை
நாயை தூக்கி அடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி
நாயை தூக்கி அடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி
நானுஓயா, எடின்போரோ தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை கொடூரமாக தாக்கி, வீதியில் தலைகீழாக தூக்கி அடித்து, ஆற்றில் வீசிய குற்றச்சாட்டின் கீழ், சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞன் வியாழக்கிழமை (28) நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர், நுவரெலியா நீதவான் லங்கானி பிரபுத்திகா முன்னிலையில் வௌ்ளிக்கிழமை (2( ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேக நபரை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.