இலங்கை

நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள்: மட்டக்களப்பில் கோரிக்கை

Published

on

நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள்: மட்டக்களப்பில் கோரிக்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நாளைய தினம் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு கட்சி பேதம் இன்றி இன மத பேதம் இன்றி அனைவரும் வலுச்சேர்க்க வேண்டிய கடமையிருக்கின்றது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

 மட்டு.ஊடக அமையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Advertisement

நாளைய தினம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இதனை முன்னிட்டு வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் நடைபெற இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த பேரணிக்கு சிவில் சமூகங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். 

 அதேபோன்று அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கின்றோம் அந்த வகையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய நாங்கள் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் இந்த பேரணிக்கு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் வேலை செய்து கொண்டிருக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த நாங்களும் எங்களுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

 காணாமல் ஆக்கப்பட்டோர் என்கின்ற விதத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பது மாத்திரம் அல்லாமல் இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அதாவது கடந்த போராட்ட காலங்களில் எங்களுடைய மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டதற்கு மேலாக பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். 

Advertisement

 அதேபோன்று இறுதி யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தங்களுடைய உறவினர்களினால் இலங்கை ராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட அந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கின்றார்கள்.

இவர்களது நிலமை பதினாறு ஆண்டுகளை கடந்தும் இன்னமும் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் எவ்வாறு இருக்கின்றார்கள் என்கின்ற சந்தேகங்கள் எங்களுடைய மக்கள் மத்தியில் இருக்கின்றது. 

 இந்த புதிய அரசாங்கம் இன்று பல கடந்த கால சம்பவங்களுக்கான நீதியை கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களது நிலைமையும் கருத்தில் கொண்டு அவர்களுடைய உறவினர்கள் படும் துன்பங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கின்றார்களா இல்லையா அவ்வாறு இருந்தால் அவர்களை கண்டுபிடித்து தங்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டிய கடமைப்பாடு இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

Advertisement

 ஏனென்றால் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பாராளுமன்ற தேர்தலின் போதும் என் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களிலும் போதும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்து இன்று வடக்கு கிழக்கில் பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்கின்றார்கள்.

 அந்த வகையில் இந்த அரசாங்கத்திற்கு ஒரு பெரிய கடமை இருக்கின்றது இந்த தமிழ் மக்களது துயரங்களை நீக்குவதற்காக இன பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பது என்பது ஒரு விடயமாக இருந்தாலும் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வந்து இந்த இன பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை காண்போம் என்று கூறிய இந்த அரசு இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் ஒரு நீதியை கொடுக்க வேண்டும்.

நாளைய தினம் நடைபெற இருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளில் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு நாங்கள் கட்சி பேதம் இன்றி இன மத பேதம் இன்றி அனைவரும் வலுச்சேர்க்க வேண்டிய ஒரு தேவையில் கடமையில் இருக்கின்றோம். 

Advertisement

 அந்த வகையில் நாங்கள் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த நாங்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலே நாளை நடைபெற இருக்கும் பேரணிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் இந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வலுச்சேர்க்க வேண்டும் ஆதரவு கொடுக்க வேண்டும். 

 இந்த பேரணியை ஒரு பிரமாண்டமான பேரணியாக நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எங்களுடைய மக்களுக்கு ஒரு அறைகூவளை இருக்கின்றது.

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கைது செய்யப்பட்டவுடன் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களது கட்சி பேதங்களை மறந்து ஒன்றாக தெற்கிலே அணி திரண்டு இருக்கின்றார்கள். 

Advertisement

 எங்களை பொருத்தமட்டில் பல விதமான கதைகள் இந்த கைது சம்பந்தமாக இருக்கின்றது அந்த வகையில் வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ அரச சொத்துக்களை பிழையாக பாவித்தார்கள் என்கின்ற காரணங்கள் பல இருக்கின்றது.

இது விடயமாக ஒரு தனிப்பட்ட ரீதியிலே நாங்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இந்த கைதினை பற்றி தற்போதைய நிலைமையில் பெரிதாக விமர்சிக்கும் அளவிற்கு நாங்கள் இல்லை பொறுத்திருந்து பார்ப்போம்.

 இன்றைய தினம் 29ஆம் திகதி அரசியல் கட்சிகள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முன்னெடுப்புடன் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் இந்த செம்மணி புதைகுழி உட்பட வடக்கு கிழக்கில் இருக்கின்ற புதைகுழிகள் தொடர்பாகவும் கடந்த காலங்களில் வடகிழக்கில் ஏற்பட்ட போர் குற்றம் சார்பாகவும் ஒரு கையெழுத்து போராட்டத்தை நடத்தி ஐக்கிய நாடுகள் சபைக்கு அந்த கையெழுத்துகளை அனுப்புவதற்கு நாங்கள் முடிவு செய்து இருக்கின்றோம்.

Advertisement

 அந்த வகையில் ஒரே நாளில் அதாவது இன்றைய நாள் வடக்கு கிழக்கு தழுவிய அந்த கையெழுத்து போராட்டத்தை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது இருப்பினும் இன்றைய தினம் வடக்கில் அந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெறுகின்றது. 

 நாங்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இந்த தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களுடன் கேட்டு இருக்கின்றோம் இன்னும் ஒரு திகதியை தீர்மானித்து அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளும் ஒரு கையெழுத்து போராட்டமாக கிழக்கில் செய்ய வேண்டும் என்று.

 இன்று வடக்கில் நடைபெற்றாலும் இன்னுமொரு திகதியில் மிக விரைவில் கிழக்கில் அந்த கையெழுத்து போராட்டம் நடைபெறும்.

Advertisement

 அரசியல் பழிவாங்கல் என்று எதிர் கட்சிகள் கூறுகின்றன அரசாங்கம் அப்படி அரசியல் பழிவாங்கல் அல்ல கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள் செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு கொண்டு இருக்கின்றதாக கூறுகின்றார்கள்.

 ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் இருப்பவர்களும் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளில் செய்துள்ளார்கள் என்றும் அதேபோன்று புதிதாக வந்த அரசாங்கமும் பல நூற்றுக்கணக்கான கொள்கலன்களை எந்தவிதமான பாதுகாப்பு பரிசோதனைகளும் இல்லாமல் விடுவித்திருக்கின்றார்கள் அதுவும் ஒரு ஊழல்தான் என்று கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்.உண்மையில் எங்களைப் பொறுத்தளவில் ஊழல் செய்தவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் ஆட்சியேபனை இல்லை.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version