சினிமா

“நீலாம்பரி vs படையப்பா”..மீண்டும் திரையரங்கில் சூப்பர் ஹிட் காட்சி..!

Published

on

“நீலாம்பரி vs படையப்பா”..மீண்டும் திரையரங்கில் சூப்பர் ஹிட் காட்சி..!

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், சௌந்தர்யா, செந்தில் உள்ளிட்ட பிரபலங்களின் 1999ஆம் ஆண்டு நடிப்பில் வெளிவந்த படம் தான்’படையப்பா’.இந்த படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இடம்பெற்று இருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்ததுடன் அதிலும் குறிப்பாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யாகிருஷ்ணனின் நடிப்பு வேறலெவல் என்றுதான் கூற வேண்டும்.இந்நிலையில் படையப்பா படம் வசூலில் சாதனை படைத்ததுடன் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றம் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளையும் வென்று முன்னணி நடிகர்களுக்கு சவால் விட்ட காலமாக 1999 ஆம் ஆண்டு அமைந்திருந்தது.இது இவ்வாறு இருக்க படையப்பா திரைப்படம் வெளியாகி 27 வருடங்கள் கடந்த நிலையில் விரைவில் ரீ ரிலிஸ்க்கு தயாராக உள்ளதாக அந்த படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட அறிவிப்பில்,படையப்பா திரைப்படம் ரீ ரிலிஸில் தற்போதைய ரசணைகளுக்கு ஏற்ற தொழினுட்பத்தை உட்புகுத்தி தயார்ப்படுத்தியுள்ளோம்.படையப்பா திரைப்படத்தை எப்போது ரீ ரிலிஸ் செய்வது என்பதை ரஜினிகாந் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் படையப்பா திரைப்படத்தை மீண்டும் திரையில் காணும் ஆவலில் ரஜினி ரசிகர்கள் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version