பொழுதுபோக்கு
பிராமின் பெண்ணுடன் காதல், எம்.ஜி.ஆர் முன்னிலையில் சர்ச் வாசலை மூடி நடந்த திருமணம்; வில்லன் நடிகர் மகன் ஓபன் டாக்!
பிராமின் பெண்ணுடன் காதல், எம்.ஜி.ஆர் முன்னிலையில் சர்ச் வாசலை மூடி நடந்த திருமணம்; வில்லன் நடிகர் மகன் ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த நடிகர் அசோகன், பிராமண பெண்ணான தனது மனைவியை திருமணம் செய்யும்போது நடந்த பதட்டமாக சூழல் குறித்து அவரது மகன் விண்சண்ட் அசோகன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு முக்கியமான அதே சமயம் நெருங்கிய நடிகர்களின் பட்டியலில் முன்னணியில் இருந்தவர் அசோகன். திருச்சியில் பிறந்த இவர், முதன் முதலில் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தபோது நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சந்தித்துள்ளார். 1953-ம் ஆண்டு வெளியான ஔவையார் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அசோகன், தொடர்ந்து, சிவாஜியுடன் எதிர்பாராதது, இல்லற ஜோதி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.1961-ம் ஆண்டு வெளியான தாய் சொல்லை தட்டாதே படத்தின் மூலம் எம்.ஜி.ஆருடன் நடிக்க தொடங்கிய அசோகன், அதன்பிறகு அவருடன் இணைந்து அன்பே வா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும், 1974-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் நேற்று இன்று நாளை படத்தை தயாரித்து அதில் வில்லனாகவும் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்ட அசோகன், 1982-ம் ஆண்டு மரணமடைந்தார். மேரி ஞானம் (ஒரிஜினல் பெயர் சரஸ்வதி என்று கூறப்படுகிறது) என்பரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்ற அசோகனின் மகன் விண்செண்ட் அசோகன், தனது அப்பாவின் காதல் திருமணம் குறித்து பேசியுள்ளார். அப்பா கிறிஸ்துவர். அம்மா பிராமிண் பொண்ணு, இவர்களின் திருமணம் சர்ச்சில் தான் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தடைகள் வந்துவிடுமோ என்ற பயத்தில் அப்பா பதபதைப்புடன் தான் இருந்ததாக அம்மா கூறியுள்ளார். மேலும் திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக, சர்ச் வாசலை முடிவிட்டு உள்ளே திருமணம் நடைபெற்றுள்ளது.இந்த திருமணத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இயக்குனர் ஏ.சி.திரிலோகச்சந்தர், மற்றும் எம்.சரவணன் உள்ளிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றிருந்தாலும், இதை ஒரு விழாவாக மாற்றியவர் எம்.ஜி.ஆர் என்று அசோகன் கூறியுள்ளார். மேலும், அப்பாவிடம் அம்மா மரியாதை கலந்த பயத்துடனே இருந்துள்ளார். எதாவது கேட்க வேண்டும் என்றாலும் என்னிடம் சொல்லித்தான் கேட்பார் என்று கூறியுள்ள விண்செண்ட் அசோகன், அப்பா இறந்தவுடன், நடிகர் ஜெய்சங்கர் தனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தாக கூறியுள்ளார்.