சினிமா
“பிளாக் மெயில்” ரிலீஸ் தேதி மாற்றம்… ரசிகர்களின் காத்திருப்பு மீண்டும் நீடிக்கிறதா.?
“பிளாக் மெயில்” ரிலீஸ் தேதி மாற்றம்… ரசிகர்களின் காத்திருப்பு மீண்டும் நீடிக்கிறதா.?
மு. மாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் “பிளாக் மெயில்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.முதலில் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம், சில காரணங்களால் வெளியாகவில்லை. தற்போது செப்டெம்பர் 12, 2025 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியீட்டு தேதியில் ஏற்பட்ட மாற்றம் திரைப்பட ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்து வருகிறது.படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்தியில், “பிளாக் மெயில்” திரைப்படத்தின் சில முக்கிய பணிகள் மற்றும் ப்ரமோஷன் வேலைகள் காரணமாக வெளியீட்டு தேதி மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.