இலங்கை
பெண்களின் பாதுகாப்பிலேயே அபிவிருத்தி தங்கியுள்ளது; பிரதமர் ஹரிணி தெரிவிப்பு!
பெண்களின் பாதுகாப்பிலேயே அபிவிருத்தி தங்கியுள்ளது; பிரதமர் ஹரிணி தெரிவிப்பு!
ஒவ்வொரு பெண்ணும், பெண்பிள்ளையும் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்கி அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.அதன் மூலம் நாட்டில் முழுமையான அபிவிருத்தியை அடைய முடியும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஐ.நா.சனத்தொகை நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, ‘பாலின சமத்துவத்தின் மூலம் கொள்கை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துதல் அறிவின் மூலம் நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல்’ என்ற தலைப்பிலான கொள்கை மற்றும் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு முழுமையாக அபிவிருத்தியடைய பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்வேண்டும். இதை அடைவதன் மூலம், ஒட்டுமொத்த நாடும் முன்னேற முடியும். பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தி, அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பது தேசியமுன்னேற்றத்துக்கு அவசியம் – என்றார்.