இலங்கை
பொருண்மியத்தில் நலிவுற்ற 111 இணையர்களுக்கு சந்நிதியில் திருமணம்!
பொருண்மியத்தில் நலிவுற்ற 111 இணையர்களுக்கு சந்நிதியில் திருமணம்!
பொருண்மியத்தில் நலிவுற்ற நிலையில் இருந்த 111 இணையர்களுக்கு. தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் நேற்றுத் திருணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர்வாழ் துரை சுமதினி குடும்பத்தினரின் முழுமையான நிதிப்பங்களிப்பில், யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரன், யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் சா. சுதர்சன் ஆகியோரின் நேரடி ஒருங்கிணைப்பில் இந்தத் திருமண வைபவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 பிரதேசசெயலகப் பிரிவுகளையும் சேர்ந்த இணையர்கள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.