பொழுதுபோக்கு
மகளுக்கு வந்த சின்ன ஆசை; பாரதியை பாட்டில் வைத்த யுகபாரதி: விஜய் சேதுபதி படத்தில் இந்த ஹிட் பாடலை கேளுங்க!
மகளுக்கு வந்த சின்ன ஆசை; பாரதியை பாட்டில் வைத்த யுகபாரதி: விஜய் சேதுபதி படத்தில் இந்த ஹிட் பாடலை கேளுங்க!
தமிழ் திரையுலகில் தனித்துவமான பாடல்களை எழுதி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாடலாசிரியர் யுகபாரதி. இவர் தனது பாடல்களுக்கான கருப்பொருளை தனது குடும்பத்தினரிடமிருந்தே பெறுவதாக நியூஸ் 18க்கு அளித்த ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அவரது குடும்ப உறவுகளின் அன்புதான் அவரது பாடல்களுக்குள் ஜீவனாக கலந்திருக்கிறது என்பதை அவர் கூறிய சுவாரஸ்யமான தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.ஒருமுறை யுகபாரதியின் மகள், தன்னைப்பற்றி ஏன் இதுவரை பாடல் எழுதவில்லை என்று ஒரு சின்ன ஆதங்கத்துடன் கேட்டுள்ளார். மகளின் இந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக உருவானதுதான், விஜய் சேதுபதி நடித்த ‘ரெக்க’ திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான “கண்ணம்மா கண்ணம்மா அழகு பூங்கிளி”. இந்தப் பாடல் மகளுக்கு தந்தையின் அன்பைப் பாடும் விதமாக அமைந்தது. இந்தப் பாடலில் யுகபாரதி ஒரு சிறப்பு வரியையும் சேர்த்துள்ளார். “யுகபாரதி உன் சாயலை பாடலாக மாற்றுவான்” என்ற வரி, தனது மகளின் சாயலைக் கொண்டு இந்தப் பாடலை எழுதியதை நேரடியாக உணர்த்துகிறது.”ரெக்க” திரைப்படத்தில் இடம்பெற்ற “கண்ணம்மா கண்ணம்மா” பாடலில் குறிப்பாக “பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான் தேவதை நீ தான் என வாயார போற்றுவான்” இந்த வரிகளில் பாரதி என்பது யுகபாரதியை குறிப்பது. யுகபாரதிதான் தனது மகளுக்காக அந்த பாடலை எழுதியிருப்பார். இதுமட்டுமல்லாமல், யுகபாரதி தனது மனைவிக்காகவும் பாடல்களை எழுதியுள்ளார். ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ திரைப்படத்தில் வரும் “அம்முக்குட்டி நீ” என்ற பாடல், தனது மனைவியை வீட்டில் செல்லமாக “அம்மு” என்று அழைப்பதிலிருந்து உருவானதாம். இதேபோன்று, ‘தீபாவளி’ திரைப்படத்தின் “கண்ணன் வரும் வேளை” பாடலில், தனது தாயார் மற்றும் மனைவி பற்றிய வரிகளையும் சேர்த்து எழுதினார். A post shared by KS / Karthigaichelvan S (@karthigaichelvan)இப்படியாக ‘அன்புள்ள அப்பா’ என்ற பாடல், ‘சிகரம் தொடு’ திரைப்படத்தில் தந்தையைப் போற்றும் விதமாக வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றது. மொத்தத்தில், யுகபாரதி தனது குடும்பத்தின் மீதான அன்பை பாடல் வரிகளாக மாற்றி, ஒவ்வொரு முறையும் புதிய ஒரு ஹிட் பாடலை உருவாக்குகிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களே அவரது பாடல்களுக்கு உயிரூட்டுகின்றன.