இலங்கை

மன்னாரில் 27ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

Published

on

மன்னாரில் 27ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் 27 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் இடம்பெற்றது. 

முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புதுறை கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு குறித்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

Advertisement

அதனை தொடர்ந்து மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதியில் இருந்து மன்னார் மாவட்ட செயலகம் வரை பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று தமது எதிர்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version