இலங்கை

யாழில் கையெழுத்து போராட்டம்!

Published

on

யாழில் கையெழுத்து போராட்டம்!

வடக்கு – கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதிகோரி கையெழுத்து போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கையெழுத்து போராட்டம் , யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (29) காலை  முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும், இன்று ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாட்டில் அனைத்து அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version