இலங்கை

வடக்கு கிழக்கில் நாளை மாபெரும் போராட்டம்

Published

on

வடக்கு கிழக்கில் நாளை மாபெரும் போராட்டம்

    சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி நாளைய தினம் (30) சனிக்கிழமை வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம் சனிக்கிழமை செம்மணியில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது.

Advertisement

கிட்டு பூங்கா முன்றலில் இருந்து பேரணியாக சென்று, மனித புதைகுழிகள் காணப்படும் செம்மணி பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டத்திற்கு, பல்கலைக்கழக மாணவர்கள் , அரசியல் கட்சிகள் , பொது அமைப்புக்கள் , உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version