சினிமா
“ஹிருதயபூர்வம்” படத்திற்கு இவ்வளவு தான் வரவேற்பா.? ரசிகர்களின் விமர்சனத்தைப் பாருங்களேன்..
“ஹிருதயபூர்வம்” படத்திற்கு இவ்வளவு தான் வரவேற்பா.? ரசிகர்களின் விமர்சனத்தைப் பாருங்களேன்..
மோகன்லால், மாளவிகா மோகன் நடிப்பில் உருவான “ஹிருதயபூர்வம்” என்ற படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இதனை சத்யன் அந்திக்காடு என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தின் விமர்சனம் எப்படி என்பதனை இப்பொழுது பார்ப்போம்…இப்படத்தில் மோகன்லால் சந்தீப் பாலகிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தவகையில், சந்தீப் பாலகிருஷ்ணனுக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதால், ரவீந்திரநாத் என்பவரின் இதயம் அவருக்கு பொருத்தப்படுகிறது. அதன்பின் ஹரிதா (மாளவிகா மோகனன்) சந்தீப்பை காண வருகிறார்.தனது அப்பாவின் இதயம் தான் உங்களுக்கு பொருத்தப்பட்டிருக்கிறது என்று கூறும் ஹரிதா, தனது திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்துகொள்ள சந்தீப்பை அழைக்கிறார்.சங்கீத் சீனியர் நடிகர் என்றும் பாராமல் மோகன்லாலை கலாய்க்கின்றார். இப்படியாக, எமோஷனல் மற்றும் அதிரடித் திருப்பங்களுடன் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கதையின் முதல் பாதி நன்றாக உள்ளது இரெண்டாம் பாதி சற்று சோர்வாக காணப்பட்டதாகவும் கூறினார்கள். அதனை சரி செய்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவிக்கின்றார்கள்.