சினிமா

1000 கோடியெல்லாம் இல்லை.. கூலி இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

Published

on

1000 கோடியெல்லாம் இல்லை.. கூலி இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.அப்படி செய்தால் தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி படமாக ரஜினியின் கூலி இருந்திருக்கும். ஆனால், இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. ஆனாலும் கூட முதல் நான்கு நாட்களில் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது.ஆனால், அதன்பின் பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்கிய கூலி சரிவை சந்தித்து. இந்த நிலையில், 15 நாட்களை கடந்திருக்கும் கூலி படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, உலகளவில் 15 நாட்களில் ரூ. 502 கோடி வசூல் செய்துள்ளது. இது ரஜினியின் திரை வாழ்க்கையில் ரூ. 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் ரெகார்ட்டை தொடும் மூன்றாவது திரைப்படமாகும். இதற்கு முன் 2.0, ஜெயிலர் ஆகிய படங்கள் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதன்பின் வெளிவரவிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படமாவது ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version