இலங்கை

15 நாள் காதலன்…15 நாள் கணவன்; திருமணமான பெண் ஓட்டம்!

Published

on

15 நாள் காதலன்…15 நாள் கணவன்; திருமணமான பெண் ஓட்டம்!

15 நாள் காதலன்…15 நாள் கணவன் என திருமணமான பெண் ஒருவர், கடந்த ஒரு ஆண்டில் தனது காதலனுடன் 10 முறை வீட்டை விட்டு ஓடியுள்ள சம்பவம் இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Advertisement

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தில் வசிக்கும் சுக்ராம் என்பவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மேகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி கணவன் வீட்டிற்கு வந்த மேகா, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்த நிலையில் கணவரை விட்டுவிட்டு காதலனுடன் ஓடிவிட்டார்.

இதனையடுத்து மனைவியை அழைத்து வரும்படி ஊர்பெரியவர்கள் சுக்ராமை நிர்பந்தித்ததனால் மனைவி இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து, அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

Advertisement

சுக்ராம் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாலும், அவரது மனைவி தொடர்ந்து வீட்டில் இருக்கவில்லை.

 இப்படியே கடந்த ஒரு ஆண்டில் தனது காதலனுடன் 9 முறை ஓடிவிட்டார். கடைசியாக, கடந்த 8 நாள்களுக்கு முன்பு தனது காதலனுடன் ஓடியதால் சுக்ராம் நேரடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்று, இது தொடர்பாக புகார் அளித்தார்.

தனது மனைவிமீது வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றும், அவரை தன்னிடம் அழைத்து வந்தால் போதும் என்றும் சுக்ராம் தெரிவித்தார்.

Advertisement

பொலிஸாரும் அப்பெண் இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து, அழைத்து வந்து மீண்டும் சுக்ராமிடம் ஒப்படைத்த நிலையில் அடுத்த நாளே மீண்டும் மேகா தனது காதலன் வீட்டிற்கே சென்றுவிட்டார்.

 இதையடுத்து, சுக்ராம் கிராம பஞ்சாயத்தை கூட்டி தனது பிரச்சினையை தெரிவித்ததை அடுத்து
பஞ்சாயத்தார் மேகாவையும் பஞ்சாயத்துக்கு வரவழைத்து கணவனுடன் வாழும்படி கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அதற்கு மேகா சம்மதிக்கவில்லை.

Advertisement

சுக்ராம், தனது மனைவி தன்னுடன் வரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால் பஞ்சாயத்தார் தலையைப் பிய்த்துக்கொண்டனர்.

அந்த நேரத்தில், மேகாவே பிரச்சினைக்கு தீர்வு காண, தனது காதலனுடனும் கணவனுடனும் மாறி மாறி வாழ்வதாக மேகா தெரிவித்தார். அதாவது மாதத்தில் 15 நாள் கணவன் வீட்டிலும், 15 நாள் காதலன் வீட்டிலும் வாழ்வதாக அறிவித்தார்.

மேகா தெரிவித்த முடிவை கேட்டு பஞ்சாயத்தில் இருந்த பெரியவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் தனது மனைவியின் முடிவை கேட்டு அதிர்ச்சியில் இருந்த சுக்ராம் , “எனது மனைவி அவளது காதலனுடனேயே வாழட்டும், எனக்கு வேண்டாம்” என்று சொல்லிவிட்டாராம். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version